மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்கான் நகரில் பைபாஸ் சாலையில் மின் பகிர்வு கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கம்பம் நடும் பணியின்போது திடீரென மின்சாரம் பாய்ந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மஜல்கான் நகரில் புதிய மின் கம்பம் எழுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்சாரம் பாய்ந்ததில், அங்குப் பணியில் இருந்த தொழிலாளி வினாடி நேரத்திற்குள் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி, வெறும் ஐந்தே வினாடிகளுக்குள் இந்த அதிர்ச்சிகரமான மின் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தின்போது உடனிருந்த மற்றொரு தொழிலாளி உயிர் தப்பியுள்ளார். அருகில் இருந்த சக ஊழியர் நூலிழையில் அதிலிருந்து தப்பியிருந்தாலும், மின்சாரம் தாக்கியதில் முதல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாக மேற்கொள்ளாமல் மின் விநியோகப் பணிகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற விபடுகள் தொடர்கதையாகி வருவது குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.