சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, நேற்று அந்த விடுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், மாணவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் அந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு சமூக நீதித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுதி மாணவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பிற தேவைகளை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த உடனடி நடவடிக்கை, மாணவர்கள் மற்றும் அவர்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.