திருவாரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில், கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் சிறுவன் ஒருவனுடன் வந்த பெண், அங்கிருந்த பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையில் யாரும் இல்லாததைக் கவனித்த அந்தப் பெண், தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு லாவகமாகப் பணத்தைத் திருடியுள்ளார். இதைக் கண்ட கடை உரிமையாளர் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, அவர் 500 ரூபாயை மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்தப் பெண் உண்மையில் எவ்வளவு பணத்தைத் திருடினார் என்பதை அவரே வாயால் சொல்ல வேண்டும் என்பதற்காக, உரிமையாளர் 5,000 ரூபாய் திருடப்பட்டதாகக் கூறி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆளில்லா கடைகளில் சிறுவனை விட்டு பெண் செய்த வில்லங்க வேலை..
கையும் களவுமாகப் பிடித்த உரிமையாளர்.. பகீர் சிசிடிவி காட்சி..#Tiruvallur | #CCTV | #Theft | #PolimerNews pic.twitter.com/5BCYte2vdZ
— Polimer News (@polimernews) June 15, 2026
“>
இந்தத் திருட்டுச் சம்பவம் மற்றும் அதன் பின் நடந்த இந்தச் சுவாரசியமான உரையாடல் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
