நெதர்லாந்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் கர்பிணிப் பெண் என்றும் பாராமல் அவரைப் போலீஸ்காரர் ஒருவர் அக்மார்க் கொடூரமாகக் கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் மாபெரும் விவாதப் புயலையும் நெட்டிசன்களின் மெகா கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் செயிஸ்ட் (Zeist) பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த சில வன்முறை மற்றும் கத்திக்குத்து மிரட்டல் புகார்களை அடுத்து அங்கு வந்த டச்சு போலீசார், அங்கிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அராஜகமாகக் கீழே தள்ளிவிட்டு முரட்டுத்தனமாகக் கைது செய்ய முயன்றனர்.

காசாவில் (Gaza) தனது சகோதரர் கொல்லப்பட்ட செய்தி கேட்டு மனமுடைந்த அந்தப் பெண்ணின் கணவர், அங்கிருந்த டிவியை உடைத்ததால் தான் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த மாபெரும் அராஜகத் தாக்குதலால் அந்தப் பெண்ணுக்குக் குறைப்பிரசவத்தில் (Premature birth) குழந்தை பிறந்துள்ளதோடு, தற்பொழுது வரை அவர் ஆஸ்பத்திரியிலேயே தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக நெதர்லாந்து அதிகாரிகள் தற்பொழுது உள் துறை விசாரணையை (Internal review) அதிரடியாக ஆரம்பித்துள்ள இந்த வீடியோ செய்தி, சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி  வைரலாகி வருகிறது.