உத்தரப் பிரதேசத்தின் மவ் மாவட்டத்தில், உள்ள காவல் அலுவலகத்திற்குள் பெண் காவலர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வேலை கிடைத்தால் என்ன நடக்கும்? உடம்பில் சூட்டும், காலில் பூட்டும் இருக்கும்…” என்ற சினிமா பாடலின் வரிகளுக்கு அந்தப் பெண் காவலர் சீருடையில் இருந்துகொண்டே முகபாவனைகளை வெளிப்படுத்தி வீடியோ எடுத்துள்ளார்.
அரசு மற்றும் காவல் துறையின் கடுமையான உத்தரவுகளையும் மீறி, காவலர்கள் தங்களின் புகழுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் காவலர்களின் வீடியோவை உடனடியாக நீக்கச் செய்த காவல் துறை, அவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உயர் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக ஊடகக் கொள்கைகளை மீறி காவலர்கள் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதைத் தடுக்க, காவல்துறை தலைமையகம் தற்போது ஒரு அதிரடி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதன்படி, விதிகளை மீறும் காவலர்களை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது எவ்விதப் பனிவமுமின்றி கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
UP: Woman Cop’s Reel From Police Office in Mau Goes Viral
A video from Uttar Pradesh’s Mau district is going viral on social media, showing a woman police personnel making a reel inside an office premises.
The reel features the song lyrics, “Jab naukri milegi to kya hoga…… pic.twitter.com/l6vvXxYLg3
— Atulkrishan (@iAtulKrishan1) May 17, 2026
“>
மேலும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட காவலர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களின் லிங்க் போன்றவற்றை உள்ளடக்கிய மாதாந்திர அறிக்கையைத் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் காவல்துறையின் ஒழுக்கத்தையும் மாண்பையும் நிலைநாட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
