சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காகப் பொதுமக்கள் பொது இடங்களில் ரீல்ஸ் செய்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சேலை அணிந்த பெண் ஒருவர் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டு, நகரும் ரயிலைப் பின்தொடர்ந்து சினிமா பாணியில் வெறித்தனமாக ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் ஏதோ முக்கியமான ரயிலைத் தவறவிட்டது போல் ஓடி, திடீரெனப் பாதையில் நின்று, 2006-ல் வெளியான பாலிவுட் திரைப்படப் பாடலுக்குத் திரும்பி நடனமாடத் தொடங்குகிறார். அந்தப் பெண்ணின் இந்தத் திடீர் செயலால், ரயிலைப் புறப்பட வைக்கும் பணியில் இருந்த காவலர் ஒரு கணம் பயந்து, திகைத்துப் போய் நின்றுள்ளார்.
மேலும், உற்றுப் பார்க்கும்போது பின்னணியில் மற்றொரு பெண்ணும் அங்கு நடனமாடிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களது கடுமையான கோபத்தையும் அதே சமயம் கிண்டலான கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற நபர்களைக் கட்டுப்படுத்த, “ரயில் ஓட்டுநர்கள் இனி தங்களோடு தடியை எடுத்துச் செல்ல வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
மற்றொருவர், “பாவம் அந்தக் காவலர், தன் கையிலிருந்த பச்சைக் கொடியைப் பறிக்க வருகிறாளோ என்று பயந்திருப்பார்” என்று கிண்டலடித்துள்ளார். ரயில் நிலையங்களில் இதுபோன்ற அராஜகங்கள் பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறுவது குறித்துப் பலரும் தங்களது கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.
