பீகார் மாநிலம் சாப்ராவில், கரை ஒதுங்கிய டால்பின் குட்டி ஒன்றைக் குழந்தைகள் விளையாட்டாகக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின், வழிதவறி கரைக்கு மிக அருகில் வந்து சிக்கிக்கொண்டதாகக் தெரிகிறது.

அந்த வீடியோவில், நீர் இல்லாமல் சுவாசிக்க முடியாமல் அந்த டால்பின் துடிப்பதையும், அதன் ஆபத்தை உணராமல் அங்கிருந்த சிறுவர்கள் அதைத் தொட்டு விளையாடுவதையும் பார்க்க முடிகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு உயிரினம் உயிருக்குப் போராடுவதைக் கண்டு எப்படி வேடிக்கை பார்க்க முடிகிறது?” என்று தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வனவிலங்கு ஆர்வலர்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டால்பின்கள் தண்ணீருக்கு வெளியே அதிக நேரம் உயிர்வாழ முடியாது என்பதும், மனிதர்கள் அவற்றைத் தொடுவது அந்த உயிரினத்திற்குப் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதும் அங்கிருந்தவர்களுக்குத் தெரியவில்லை.

இது போன்ற நேரங்களில் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பதற்குப் பதிலாக, அதை ஒரு பொழுதுபோக்காகப் பார்த்தது மக்களின் அறியாமையைக் காட்டுவதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)

“>

அழியும் நிலையில் உள்ள இது போன்ற அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு விவாதத்தைத் தொடங்கியுள்ளது.