பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மே 8-ம் தேதி மதியம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜாக்கெட் அணிந்து ஸ்டைலாக வந்த ஷாகித், அங்கிருந்த ‘டிஜி யாத்ரா’ வரிசையில் மற்ற பயணிகளைப் போலவே பொறுமையாகக் காத்திருந்தார்.
அப்போது அவருக்கு முன்னால் நின்றிருந்த ஒரு முதியவர், ஷாகித்தை அடையாளம் கண்டு, “சார், நீங்கள் முன்னால் செல்லுங்கள், இல்லையென்றால் உங்களைச் சுற்றி கூட்டம் கூடிவிடும்” என்று கனிவுடன் கூறினார். முதலில் தயங்கிய ஷாகித், பிறகு அந்த முதியவருக்கு நன்றி கூறிவிட்டு முன்னால் சென்றார்.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், அந்த முதியவரின் பண்பையும் ஷாகித் கபூரின் எளிமையையும் பாராட்டி வருகின்றனர். “இந்த நாட்டிலுள்ள பாதி பேரை விட அந்த பெரியவருக்கு அதிக விவேகம் இருக்கிறது” என்றும், “முதியவர்களிடம் கூட ஷாகித் மரியாதையைச் சம்பாதித்துள்ளார்” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை கரீனா கபூர் விமான நிலையத்தில் வரிசையை முந்திச் சென்றதாகக் கூறி சர்ச்சையான நிலையில், ஷாகித் கபூர் வரிசையில் நின்றதும், அவர் கேட்டுக் கொண்ட பிறகே முன்னால் சென்றதும் பலரது மனதை வென்றுள்ளது.
