சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி, தனது தாயார் மறைந்த 48 மணி நேரத்திலேயே களமிறங்கி விளையாடிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முகேஷின் தாயார் காலமான நிலையில், தனது தாயாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு உடனடியாக அணியுடன் இணைந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், சென்னை வீரர்கள் அனைவரும் முகேஷின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

இந்த இக்கட்டான சூழலிலும் அணியின் வெற்றிக்காக விளையாட வந்த முகேஷின் மன உறுதியை சிஎஸ்கே நிர்வாகமும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

மும்பை அணி 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியபோது, முகேஷ் சௌத்ரி தனது முதல் ஓவரிலேயே நட்சத்திர வீரர் குயின்டன் டி காக்கை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார்.

விக்கெட்டை வீழ்த்தியவுடன் அவர் உணர்ச்சிவசப்பட்டு வானத்தைப் பார்த்து தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“>

 

முன்னதாக சென்னை அணிக்காக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெரும் சோகத்திலும் களமிறங்கி விக்கெட் வீழ்த்திய முகேஷ் சௌத்ரியின் அர்ப்பணிப்பு, இந்தப் போட்டியின் மிக உருக்கமான தருணமாக மாறியுள்ளது.