ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மைதானத்திற்கு வெளியேயும் ரசிகர்களுக்கு இடையேயான ‘கலகலப்பான’ மோதல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே எப்போதும் அனல் பறக்கும். இந்நிலையில், சென்னை அணியின் தீவிர ரசிகர் ஒருவர், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களைச் சீண்டும் வகையில் செய்த ஒரு வேடிக்கையான செயல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
அந்த வீடியோவில், அந்த ரசிகர் ஒரு பேட்டர் பந்தை அடிப்பது போலவும், பின்னர் மிக வினோதமான முறையில் நடந்து சென்று அந்தப் பந்தை ‘கேட்ச்’ பிடிப்பது போலவும் நடித்துக் காட்டுகிறார். மீண்டும் மீண்டும் இதே செயலைச் செய்து, சுற்றி இருக்கும் மும்பை ரசிகர்களை நோக்கி அவர் காட்டிய ‘ஓவர் ஆக்டிங்’ சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ @rushiii_12 என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த ரசிகரின் மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகளும், உடல் மொழியுமே இந்த வீடியோ வைரலாக முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன. சில ரசிகர்கள் இதை “ஜாலியான கிண்டல்” என்று ரசித்துக் கமெண்ட் செய்துள்ளனர். அதே நேரத்தில், சில சென்னை ரசிகர்கள், “இது போன்ற செயல்கள் எங்களது ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை” என்று கூறி மும்பை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பெருந்தன்மையை வெளிப்படுத்தினர்.
A CSK fan teasing a Mumbai Indians fan and making fun of them after the match.😢💔 pic.twitter.com/DCQREicWWo
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 23, 2026
ஒரு பயனர் கிண்டலாக, “அவருக்குப் பாதிப்பு ஏதும் இருக்குமோ?” எனப் பதிவிட, மற்றொருவர் “மும்பை அணி விரைவில் பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் களத்தில் வீரர்கள் காட்டும் ஆக்ரோஷத்தை விட, கேலரியில் ரசிகர்கள் காட்டும் இந்த அலப்பறைகள் ஐபிஎல் திருவிழாவிற்கு கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளன.
