பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 11 அன்று இருவருக்கும் வெகுவிமர்சையாகத் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் உலக அளவில் விளையாட்டிலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தத் திருமண விழாவில் ஜார்ஜினா அணிந்திருந்த ஆடைகளும், நகைகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. குறிப்பாக, அவர் கழுத்திலும் கைகளிலும் அணிந்திருந்த வைர நகைகளின் மதிப்பு மட்டுமே சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றத் தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற வைரங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள், திருமண விழாவிற்கு மேலும் மிடுக்கையும் பிரம்மாண்டத்தையும் சேர்த்தன. உலக அளவில் உள்ள முன்னணி ஆடை மற்றும் நகை வடிவமைப்பாளர்களால் இவை சிறப்பாகத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெடுநாட்களாகத் தங்களது திருமணத்தை எதிர்பார்த்துக்காத்திருந்த ரொனால்டோவின் ரசிகர்களுக்கு, இந்த ஆடம்பரத் திருமணம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த 10 ஆண்டு காலத் தங்களது காதல் பயணத்தை வெற்றிகரமாகத் திருமண பந்தத்தில் இணைத்துள்ள இந்தத் தம்பதிக்கு, உலகெங்கிலும் உள்ள விளையாட்டுப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.