மகாராஷ்டிராவில் நடந்த இந்த மர்மமான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உறைய வைத்துள்ளது. தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர், திடீரென மர்மமான முறையில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாயமான பிறகு வீட்டின் அருகே இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, பார்ப்பவர் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்தப் பெண் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், கைகளைத் தூக்கியபடி ஒரு இயந்திரம் போலத் தானாக விறுவிறுவென நடந்து செல்வதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

​எதார்த்தமான மனித நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, யாரோ ஒரு காந்த சக்தியால் அல்லது வசியத்தால் இழுக்கப்படுவது போன்ற அவரது விசித்திரமான செயல், இது திட்டமிட்ட கடத்தலா அல்லது ஏதேனும் மாந்திரீக பின்னணியா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு ரோபோட் போல அவர் எப்படி தானாக நடந்து செல்கிறார்?” என அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் மிரண்டு போயுள்ளனர். போலீசார் இந்த வினோத காணொளியை முதன்மை ஆதாரமாகக்கொண்டு, மாயமான அந்த இளம்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.