தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழக அரசு பெண்களுக்காகச் செய்த நிதி உதவிகளைப் பட்டியலிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ​”கடந்த பிப்ரவரி 24-ம் தேதி காலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ₹5,000 செலுத்தப்பட்டது.

அதற்கு முன்பே ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000, பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 மற்றும் பிப்ரவரி மாத உரிமைத் தொகை ₹1,000 என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தமாக ₹10,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவிகளை மறந்துவிடாதீர்கள்” என்று அமைச்சர் அதிரடியாகப் பேசினார். அமைச்சரின் இந்த ‘பணக் கணக்கு’ பிரசாரம் தற்போது பெண்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்-யையும் பெற்றுள்ளது.