அமைச்சர் உதயநிதியை “விளையாட்டுப் பையன்” என்று விமர்சித்துள்ள ஜோஸ் சார்லஸ், அவருக்கு வெளி உலகமே தெரியாது என்றும், அவரது பெயரே “பால்தாயில்” உதயநிதிதான் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். பொதுவாகத் தமிழ் மரபுப்படி எல்லாரும் படிக்கும் காலத்திலோ அல்லது திருமணத்திற்கு முன்னரோ காதலிப்பார்கள், பிறகு திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று அவர்களைக் கரை சேர்ப்பார்கள்; ஆனால் இவர் ஏற்கனவே திருமணமான நிலையில் சினிமா நடிகைகளைக் காதலிப்பதையே வேலையாக வைத்திருப்பதாகப் புகார்களை அடுக்கினார்.

​அப்படி நடிகைகளைக் காதலிக்கும்போது திடீரென காதல் தோல்வி அடைந்தால், உதயநிதி உடனே ‘பால்தாயில்’ குடித்து விடுவார் என்றும், அதனால்தான் அவருக்கு அந்தப் பெயரே வந்தது என்றும் ஜோஸ் சார்லஸ் கிண்டலடித்தார். உதயநிதியின் சில விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்க வந்ததால்தான் பிரச்சாரத்திற்கு வர இரண்டு நாள் தாமதமானதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையை மேடையிலேயே செமையாக வறுத்தெடுத்துப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.