தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், திமுக தொண்டர்கள் ஒரு பேனரை வழங்கினர். அதைத் தயக்கத்துடன் வாங்கிய உதயநிதி, “இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நீங்களே கொடுத்து விடுகிறீர்கள்; இதைக் காட்டினால் அவர் (எடப்பாடி பழனிசாமி) என்னைத் திட்டப் போகிறார்” என்று சிரித்துக்கொண்டே ஜாலியாகக் கூறிவிட்டு, பின்னர் அந்தப் பேனரை மக்கள் மத்தியில் விரித்துக் காட்டினார். அந்தப் பேனரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலாவின் காலில் விழுவதற்காகத் தவழ்ந்து சென்ற அந்தப் பழைய புகைப்படம் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது.
எடப்பாடியை
குஜிலி மஸ்து பண்ணிட்டாங்க 😸😸 pic.twitter.com/XinIgncu9t— கல்கி குமார் (@kalgikumaru) April 17, 2026
”நானாக இதைச் செய்யவில்லை, நீங்கள்தான் கட்டாயப்படுத்துகிறீர்கள்” என்று ஜாலியாகச் சொல்லிவிட்டு, அந்தப் புகைப்படத்தைக் காட்டி எடப்பாடி பழனிசாமியை உதயநிதி கலாய்த்த விதம் அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கைதட்டலையும் சிரிப்பலையையும் உண்டாக்கியது. எடப்பாடி பழனிசாமியின் அந்த ‘தவழ்ந்த’ புகைப்படத்தை வைத்து உதயநிதி செய்த இந்தச் சுவாரஸ்யமான விமர்சனம் அடங்கிய வீடியோ, தற்போது ‘X’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
