சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நாய் தண்டவாளத்தை கடக்க முயலும்போது அதன் கால் எதிர்பாராதவிதமாக ரயில்வே தண்டவாளத்தின் இடுக்குகளுக்கு இடையே மாட்டிக்கொள்கிறது.

அந்த நேரத்தில் ரயில் வரும் அபாயம் இருந்தும், அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் நாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக விரைந்து சென்றனர். சுமார் நான்கு முதல் ஆறு ஊழியர்கள் இணைந்து, தண்டவாளத்தின் பிடியை லேசாகத் தளர்த்தி, நாயின் காலைப் பத்திரமாக மீட்டனர்.

ஊழியர்களின் இந்த துரிதமான செயலால் நாயின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன், அது அங்கிருந்து பயத்துடன் ஓடிச் சென்றது. இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய இந்த வீரர்களை இணையவாசிகள் “நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்கள்” என்று பாராட்டி வருகின்றனர்.

“>

 

“ரயில் வரும் வேளையில் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட இவர்களுக்குக் கடவுள் ஆசி வழங்கட்டும்” எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.