சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த செத்த கோழிகளை, ஏதோ இலவசப் பொருட்கள் கிடைப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாகப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு லாரியில் இருந்து வீசப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோழிகளைச் சேகரிக்க, மக்கள் சாக்குகளுடனும் வெறும் கைகளுடனும் முண்டியடித்தனர்.

பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தெரிந்தாலும், தங்களுக்குத் தேவையானதை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் காட்டிய வேகம் மற்றும் ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்ற விதம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் நகைச்சுவையைத் தாண்டி உடல்நலம் சார்ந்த மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. எந்தவிதப் பாதுகாப்புமுமின்றி செத்த கோழிகளைத் தொடுவதும், அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் கொடிய நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் முற்றிலுமாக மறந்து செயல்பட்டது கவலையளிக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Clear Cut India (@clearcutindia)

“>

இந்தக் காணொளியைப் பார்த்த பலரும், பொதுமக்களின் இத்தகைய அலட்சியமான போக்கைச் சுட்டிக்காட்டியதோடு, இதுபோன்ற ஆபத்தான சூழலைத் தடுக்க வேண்டிய நிர்வாகம் எங்கே போனது என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.