உத்தரப் பிரதேச மாநிலம் மவு மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் கதவை, அதன் உரிமையாளர் கவனிக்காமல் திடீரென திறந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அந்த நேரத்தில் அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக காரின் கதவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணம் செய்த இரண்டு பேரும் நிலைதடுமாறி நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்கள் விழுந்த அடுத்த சில நொடிகளில், பின்னால் அதிவேகமாக வந்த ஒரு பிக்கப் வேன் அவர்கள் மீது மோதுவது போல் மிக அருகில் வந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்தியதால், பைக்கில் இருந்து விழுந்த இருவரும் நூலிழையில் உயிர் தப்பினர்.
बेहद ही भयवाह हादसा 👇
कार वाले में अचानक गेट खोल दिया. जिससे बाइक सवार टकरा गया. और दोनों बाइक सवार गिर पड़े.
इतने में पीछे से पिकअप वाला आ गया. गनीमत रही कि जान बाल बाल बच गई. हादसा यूपी के मऊ का हो. pic.twitter.com/GnXwrjM3tx
— Priya singh (@priyarajputlive) April 15, 2026
“>
இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சாலையில் வாகனங்களை நிறுத்தும்போது கதவுகளைக் கவனமாகத் திறக்க வேண்டும் எனப் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
