கொல்கத்தாவைச் சேர்ந்த அர்னாப் டி. சாஹா என்ற இளைஞர், தனது காதலி வீட்டிற்கு வந்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்னாபின் வீட்டிற்கு வந்த அவரது காதலி, அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தியுள்ளார்.
இதைக் கவனித்த வீட்டின் பராமரிப்பாளர், உடனடியாக வீட்டு உரிமையாளரிடம் புகார் அளித்தார். அர்னாபின் அலைபேசி ‘சைலண்ட்’ பயன்முறையில் இருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாத வீட்டு உரிமையாளர், நேரடியாக அர்னாபின் பெற்றோரை அழைத்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், வீட்டிற்குப் பெண் வந்ததற்காக அர்னாப் மீது காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். ஒரு சாதாரண நட்பு ரீதியிலான சந்திப்பு, வெறும் 10 நிமிடங்களில் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியது அர்னாபைத் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நகர்ப்புறங்களில் ஆண்-பெண் நட்பு இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டாலும், வாடகை வீடுகளில் வசிக்கும் இளைஞர்கள் இன்றும் சமூகத்தின் குறுகிய மனப்பான்மையால் இது போன்ற அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றனர்.
Landlords of kolkata are the worst :
– Yesterday at night my friend needed to use washroom
– I told you can use mine, then we will go out
– It’s not even 5 mins, The caretaker of the flat called the owner that arnab is bringing a girl here
– Owner called me, my phone was silent…— Arnab D. Saha (@TheArnabSaha) April 13, 2026
“>
ஒரு பெண் வீட்டிற்கு வந்தாலே அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், அதற்காகச் சட்ட ரீதியான மிரட்டல்களை விடுப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அர்னாப், இது குறித்து சட்ட ரீதியான ஆலோசனை பெற முடிவு செய்துள்ளார்.
