கடலூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உற்சாக மிகுதியால் தொண்டர்கள் செய்த செயல் அவரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பிரசார வாகனத்தின் முன்பகுதியில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டு, திருமாவளவனைப் பேச விடாமல் தடுத்ததோடு பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திருமாவளவன், அங்கிருந்த ஒரு விளம்பர பதாகையை (Board) எடுத்து வாகனத்தில் ஏறிய தொண்டர்களை விளாசியதுடன், அவர்களைக் கீழே இறங்குமாறு ஆவேசமாகச் சத்தம் போட்டார்.
பிரச்சார வேன் மீது ஏறிய தொண்டர்களை விளம்பர பதாகையால் அடித்த திருமாவளவன்.. கோபத்தில் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட திருமாவளவன்#Cuddalore | #VCK | #Thirumavalavan | #Campaign | #Video | #PolimerNews pic.twitter.com/I4sr1EyFLr
— Polimer News (@polimernews) April 14, 2026
“>
தொண்டர்களின் இந்த அத்துமீறலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விசிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
