திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் அவர்கள் வந்திருந்தபோது, அங்கிருந்த முதியவர் ஒருவர் திடீரென விஜய்யிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அந்த முதியவர் அழைத்ததும், விஜய் எவ்வித அவசரமும் காட்டாமல் அங்கேயே நின்று அவர் சொல்ல வந்ததை அமைதியாகக் காதுகொடுத்துக் கேட்டார்.

​பொதுவாகப் பிரபலங்கள் இதுபோன்ற இடங்களில் வேகமாகச் கடந்து செல்வது வழக்கம். ஆனால், ஒரு முதியவர் கூப்பிட்டதும் நிதானமாக நின்று அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்ட விஜய்யின் இந்த எளிமையான செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, விஜய்யின் பண்பைப் பாராட்டி வைரலாகி வருகிறது.