திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் பகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது கட்சித் துண்டு வீசப்பட்டது. இந்தச் செயலால் கடும் ஆத்திரமடைந்த பிரேமலதா, துண்டை வீசிய அந்தத் தொண்டரை கடுமையாகச் சாடினார்.

​அரசியல் மேடையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடவா தெரியாது என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். அந்தத் தொண்டரின் இத்தகைய செயலைக் கண்டித்து அவர் உரையாற்றியதால், பிரச்சார இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது