பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வெளியே வந்த பிரம்மாண்ட டிரக் ஒன்று, அங்கிருந்த கார் மீது மோதப் பார்த்தது. அப்போது அங்கு நின்றிருந்த அந்த காரின் உரிமையாளர், தனது காரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சற்றும் யோசிக்காமல் தன் உடலையே கேடயமாகப் பயன்படுத்தி காருக்கும் டிரக்கிற்கும் இடையில் நின்றார்.
A man used his own body to protect his car from a truck coming out of a gas station pic.twitter.com/wD07GXZFFk
— Daily Loud (@DailyLoud) April 10, 2026
உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், ஒரு நொடியில் அவர் எடுத்த இந்தத் துணிகரமான முடிவு அங்கிருந்தவர்களை உறைய வைத்தது. டிரக் மோத வந்த வேகத்தையும், அதைத் தன் உடலால் தடுக்க முயன்ற நபரின் இந்த அதிர்ச்சிகரமான காணொளியும் தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய்ப் பரவி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
