மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா-பயந்தர் பகுதியில், மாநகராட்சி பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்முக் காட் (Gaymukh Ghat) பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, பைக் முந்திச் செல்வதில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

​சுமார் 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல், பேருந்திற்குள் அத்துமீறி நுழைந்து ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி, தடிகளால் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது சட்டையைப் பிடித்து இழுத்து, இருக்கையை விட்டு வெளியே தள்ளி, சாலைக்கு இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தத் தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பதிவாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

​ஏற்கனவே கடந்த மாதம் இதே போன்ற ஒரு தாக்குதல் நடந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஓட்டுநர் தாக்கப்பட்டிருப்பது ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோபர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.