பெற்ற பாசத்தை விடக் காதல் தான் பெரிது என்று நினைத்து, தன்னை வளர்த்த தந்தையை நடுரோட்டில் அழவிட்டு காதலனுடன் இளம்பெண் ஒருவர் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், காதலனுடன் வீட்டை விட்டு ஓட முயன்ற இளம் பெண்ணை அவரது வயதான தந்தை நடுரோட்டில் வழிமறித்துக் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
பொதுவாக இது போன்ற சூழல்களில் பெற்றோர்கள் கோபமடைவது வழக்கம், ஆனால் இந்தத் தந்தை தனது மகளை அடிக்கவோ, திட்டவோ செய்யாமல், “தயவுசெய்து என்னுடன் வீட்டிற்கு வா அம்மா” என்று கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். ஆனால், அந்தப் பெண்ணோ தந்தையின் கண்ணீரைக் கண்டு சற்றும் உருகாமல், தனது காதலனுடன் செல்வதிலேயே பிடிவாதமாக இருந்துள்ளார்.
एक मजबूर बाप की आँखों में आंसू और हाथ जोड़ता रहा लेकिन बेटी को बॉयफ्रेंड के साथ ही रहना था।
ऐसी बेटी किसी को नहीं दे। pic.twitter.com/BhZ3T9IdO4
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) June 9, 2026
தந்தை மீண்டும் மீண்டும் மகளைத் தடுத்து வீட்டிற்கு அழைக்க முயன்றபோது, “அப்பா, என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ விடுங்கள்” என்று சத்தமிட்ட அந்தப் பெண், காதலனின் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அப்போதும் விடாமல் பின் தொடர்ந்த தந்தையிடம், “இதற்கு மேலும் என்னைத் தடுத்தால் உங்கள் மீது நான் போலீசில் கேஸ் போட்டுவிடுவேன்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு காதலனுடன் சென்றுள்ளார்.
இந்த வீடியோ, லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மகளின் இந்தச் செயலால் நிலைகுலைந்து போன தந்தையின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்படும் நெட்டிசன்கள், “என் தந்தையாக இருந்தால் அங்கேயே மிதித்து இழுத்துச் சென்றிருப்பார்” என்றும், “சுயமுடிவு எடுக்கப் பெண்ணுக்கு உரிமை இருந்தாலும் வளர்த்த தந்தையை இப்படி நடுரோட்டில் அவமானப்படுத்தியிருக்கக் கூடாது” என்றும் தங்களது கலவையான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
