இன்ஸ்டாகிராம் வியூஸுக்காக ஜார்க்கண்ட் இளைஞர் ஒருவர் செய்த ஆபத்தான காரியம் இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர்களுக்கு ஐஸ்கிரீம் தருவதாகக் கூறி, கோனில் நச்சுத்தன்மை கொண்ட ‘ஸ்னோ ஸ்ப்ரேவை’ (Snow Spray) நிரப்பிக் கொடுத்துள்ளார். இதை உண்மை என நம்பிச் சாப்பிட்ட நண்பர்கள் நிலை குலைந்து போக, இந்த வீடியோ மட்டும் 9 கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
வியூஸ் மற்றும் லைக்குகளுக்காக ஒருவரின் உயிரோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கொதிப்படைந்து வருகின்றனர். ஸ்னோ ஸ்ப்ரேயில் உள்ள ரசாயனங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
