நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் அங்கிருக்கும் வாழ்க்கை முறையை கிண்டலாகப் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. “எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, நான் இந்தியாவுக்கே போகிறேன்” என்று தொடங்கும் அவர், அதற்கான காரணங்களாக அங்கு யாரும் அடுத்தவர் வீட்டுப் பஞ்சாயத்துகளைப் பேசுவதில்லை என்றும், மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து யாரும் பொறாமைப்படுவதில்லை என்றும் செம ‘ட்விஸ்ட்’ கொடுத்துள்ளார்.

​வீடியோவின் இறுதியில், “இங்கு தேவையில்லாத போட்டியோ, வதந்திகளோ இல்லை; வாழ்க்கை அவ்வளவு நிம்மதியாக இருக்கிறது” என்று தனது உண்மையான கருத்தைக் கூறியுள்ளார். இந்தியாவுக்குத் திரும்பப் போவதாகச் சொன்னது ஒரு கிண்டல்தான் என்றும், இந்த அமைதியான வாழ்க்கையைத் தான் மிகவும் நேசிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.