மீட்பு நடவடிக்கையின் போது 6 அடி நீள சாரைப் பாம்பு என்னைக் கடித்த போதும் நான் பதற்றமடையாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொண்டு இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன் என்று உத்தரப் பிரதேசத்தின்  மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது துணிச்சலான பெண் நஜ்ருன் நிஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

சுற்றியுள்ள மக்களால் ‘காட்டு ராணி’ மற்றும் ‘மீட்புப் பெண்’ என்று அன்போடு அழைக்கப்படும் நிஷா, துத்வா தேசியப் பூங்காவில் ஊக்கமளிப்பவராகப் பணிபுரிந்து கொண்டு, இதுவரை 100-க்கும் மேற்பட்ட பாம்புகளையும், 10-க்கும் மேற்பட்ட முதலைகளையும் பிடித்து அப்பகுதி கிராம மக்களுக்கு ஒரு பாதுகாவலராகத் திகழ்ந்து வருகிறார்.

தனது 19 வயதிலிருந்தே சிறு பாம்புகளைப் பிடிக்கத் தொடங்கி, தற்போது ஆபத்தான விஷப் பாம்புகளையும் அஞ்சாமல் மீட்டு வரும் நிஷா, சமீபத்தில் 6 அடி நீள தமன் (சாரை) பாம்பு ஒன்றைப் பாதுகாப்பாக மீட்டபோது அது அவரைத் தற்செயலாகக் கடித்த பிறகும், அதை விடாமல் தைரியமாகப் பிடித்துக் கூண்டில் அடைத்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாம்பு கடித்தால் யாரும் சூனியம் மற்றும் மூடநம்பிக்கைகளை நம்பி ஏமாறாமல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று உரியச் சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் விடுத்துள்ள விழிப்புணர்வு வேண்டுகோள் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.