மத்தியப்பிரதேச மாநிலம் ரிவாவில் உள்ள ஒரு ஹோட்டலில், அரசு உயர் அதிகாரி ஒருவர் தனது காதலியுடன் ரகசியமாகத் தங்கியிருந்தபோது, அவரது மனைவியான பெண் காவலரிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நீண்ட நாட்களாகத் தனது கணவர் மீது சந்தேகம் கொண்டிருந்த அந்த பெண் காவலர் (கான்ஸ்டபிள்), திட்டமிட்டு தனது உறவினர்களுடன் ஹோட்டல் அறைக்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். அப்போது, பயந்துபோய் அந்த அதிகாரி ஹோட்டல் பாத்ரூமிற்குள் ஓடி ஒளிய முயன்றார்.
ஆனால், கோபமடைந்த அவரது மனைவி, அவரை பாத்ரூமில் இருந்து வெளியே இழுத்து வந்து, காதலி மற்றும் கணவர் இருவரையும் சரமாரியாக வெளுத்து வாங்கினார். ஹோட்டல் அறைக்குள் தொடங்கிய இந்த மோதல், அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றபோது தெருவரை நீடித்தது.
இதனால் ஹோட்டலுக்கு வெளியேயும், நடுரோட்டிலும் வைத்து அந்த அதிகாரியையும் அவரது காதலியையும் அந்த பெண் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
