தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் 15 நாட்கள் காவல் விதித்துள்ளது.
இந்த நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கும் சமூக காலமாக தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் கொடுமையான பாலியல் குற்றங்களுக்கும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இந்த சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவோடு இணைத்து உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! #WhySilentCM? என்று பதிவிட்டுள்ளார்.
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள்… https://t.co/fjrNF8Vd15
— Udhay (@Udhaystalin) June 16, 2026
