சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை மென்மையாகத் தொட்டதும் வந்த பீப் ஒலியையே இசையாக மாற்றி, ஒரு மேடை நிகழ்ச்சி போல எந்தவித பயமும் இல்லாமல் கச்சிதமான முகபாவனைகளோடு சிறுமி ஒருவர் ஆடிய நடனம்!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கானோரின் இதயங்களை வென்று இணையத்தில் பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த மனதைக் கவரும் வீடியோவில், காரின் லாக் சத்தம் கேட்டவுடன் அந்தச் சிறுமி கச்சிதமான நேர உணர்வோடு தன் இடுப்பையும், கை,கால்களையும் அசைத்து அசத்தலாக நடனமாடத் தொடங்குகிறார்.

பொதுவாகச் சிறு குழந்தைகள் திடீர் ஒலிகளைக் கேட்டுப் பயப்படும் நிலையில், இந்தச் சிறுமி காரின் பீப் ஒலியைக் கேட்டுப் புன்னகையோடு ரசித்து, அதற்கேற்பத் தனது காலடிகளை மாற்றி நம்பிக்கையுடன் நடனமாடுவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shinchan Trollss (@shinchan.trollss)

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “எந்தவித பிரம்மாண்டமான ஏற்பாடுகளும் இல்லாமல், இந்தச் சிறுமியின் தனித்துவமான படைப்பாற்றல் தங்களின் மன அழுத்தத்தைப் போக்கி முகத்தில் புன்னகையை வரவழைத்துவிட்டது” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களைக் கமெண்ட்டுகளில் அள்ளி வீசி வருகின்றனர்.