கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது மேலாளருக்கு வெறும் இரண்டே வரிகளில் சுருக்கமாக ராஜினாமா மின்னஞ்சல் (Resignation Email) அனுப்பிய விசித்திரமான சம்பவம் தற்பொழுது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

பொதுவாக வேலைகளில் இருந்து விலகும் போது நீண்ட நெடிய காரணங்களை அடுக்கிக் கடிதம் எழுதும் வழக்கத்திற்கு மாறாக, அந்த ஊழியர் தனது மெயிலில், “அன்புள்ள ஐயா, நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டேன். எல்லாவற்றிற்கும் நன்றி” என்று மிக எளிமையாக இரண்டே வரிகளில் தனது முடிவை முடித்துள்ளார்.

இதை விட சுவாரசியமாக, அந்தப் பதவியை உடனடியாக ஏற்றுக்கொண்ட அவரது மேலாளர் சௌரப் குப்தா, “உங்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எங்களிடம் திரும்பி வருவதற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று மனமுவந்து நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்த மின்னஞ்சல் உரையாடலைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “நான் என் வாழ்நாளில் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ராஜினாமா கடிதம் இதுதான்” என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

கார்ப்பரேட் உலகின் டென்ஷனான சூழல்களுக்கு மத்தியில், எவ்வித கசப்புணர்வும் இன்றி மிகவும் கண்ணியமான முறையில் விடைபெற்ற இந்த ஊழியரின் இரண்டு வரி மெயிலும், அதற்குப் பெருந்தன்மையோடு பதிலளித்த மேலாளரின் அணுகுமுறையும் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில், “ராஜினாமா பண்றதுன்னா இப்படி நச்சுன்னு பண்ணனும் பாஸ்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்ஸ்களை அள்ளி செம ட்ரெண்டாகி வருகிறது.