இணையவாசிகள் ஒட்டுமொத்தமாக வியக்கும் அளவுக்கு, எந்தவித தராசும் இல்லாமல் சமையல் கலைஞர்கள் தங்கள் கைகளையே தராசாக மாற்றி காய்கறிகளைத் துல்லியமான எடையில் நறுக்கும் அசாத்திய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ‌வரும் இந்த வீடியோவில், இரண்டு சமையல் கலைஞர்கள் தங்களுக்குள் ஒரு விசித்திரமான சவாலை மேற்கொள்கிறார்கள்; அதாவது அளக்காமல் ஒரு குறிப்பிட்ட எடையில் காய்கறியை நறுக்கவேண்டும்.

அதில் ஒரு கலைஞர் சரியாக 69 கிராம் எடையுள்ள துண்டை வெட்டி அசத்த, பின்னாலிருந்து வந்த ஒரு குரல் “58 கிராம்” எனக் கேட்க, மற்றொரு சமையல் கலைஞர் கத்தியை வீசி நறுக்கிய காய்கறி வெறும் ஒரு கிராம் மட்டுமே குறைந்து 57 கிராமாக வந்து திகைக்க வைத்துள்ளது.

பல வருடக் கடின உழைப்பும் பயிற்சியும் தான் இந்தத் துல்லியத்திற்குக் காரணம் என ஒரு தரப்பினர் பாராட்ட, “10 கிராம் வித்தியாசம் இருந்தா கூட நம்பலாம், இது பல தவறான ஷாட்டுகளை வெட்டி எடிட் செய்த வீடியோ” என மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டிவருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Restaurant & Service Mentor 🌍 Brand-Chef ,,JB Group’’ (@temirsatybaldievv)

“>

“கடந்த 16 வருஷமா பார்க்காமலேயே என்னோட காபி கொட்டைகளைச் சரியாக 18 கிராம் என்னால அளக்க முடியுது” என நெட்டிசன் ஒருவர் ஆதாரத்தோடு பதிவிட, ‘உண்மையா அல்லது பொய்யா?’ என்ற இந்தச் சமையலறை விவாதம் தற்போது உலக அளவில் இணையத்தைக் குடையத் தொடங்கியுள்ளது.