சென்னையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன், 1,09,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 14,902 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,216 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.