சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, தற்பொழுது லட்சிய ஜனநாயக கட்சியில் (LJK) இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையுடன் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய அவர், ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அக்கட்சியில் அவருக்கு ‘பரப்புரை பொதுச்செயலாளர்’ என்ற மிக முக்கியப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று திடீர் திருப்பமாக லட்சிய ஜனநாயக கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தாம் விலகுவதாகத் தாடி பாலாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து அவர் விலகியுள்ள நிலையில், அவர் மீண்டும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கே (தவெக) திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் மிக பலமாகப் பேசப்பட்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் இந்த வேளையில், தாடி பாலாஜியின் இந்த அதிரடி விலகல் முடிவு சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
