மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைத் தேசிய அளவில் வீழ்த்துவதற்கு ‘இந்தியா’ (INDIA) கூட்டணியைத் தவிர வேறு எந்த ஒரு மாற்று அணியும் கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தற்பொழுது மிக ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸை விடப் பலமடங்கு வலிமையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் அவர் தற்பொழுது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

​இருப்பினும், தற்போதைய சூழலில் யார் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது என்பது முக்கியமல்ல என்றும், ஒரு தேசியக் கட்சியை மையமாக வைத்து மட்டுமே இத்தகைய நாடாளுமன்றத் தேர்தல் மெகா கூட்டணியை அமைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், காங்கிரஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது தற்பொழுது மிக மிக அவசியம்.

வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள இப்போதிருந்தே இந்தியா கூட்டணி மிக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியல் மாற்றங்களுக்கு இடையே, 2029 தேர்தல் கூட்டணி குறித்து ப.சிதம்பரம் பேசியுள்ள இந்த விவகாரம் தற்பொழுது தேசிய அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.