டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் செய்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தின் போது, சௌரவ் தாஸ் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க, அவருக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவர் கையில் அட்டைப் பலகையை வைத்து விசிறி விடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தைப் பற்றி பேசும் ஒரு கட்சியின் பிரதிநிதி, இத்தகைய ‘ராஜபோக’ செயல்களில் ஈடுபட்டது பலரது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளப் பயனர்கள் சௌரவ் தாஸின் இந்தச் செயலை மிகவும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். “பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களா, வெயிலைத் தாங்க முடியாமல் ஒருவரை விசிறி விட வைப்பது?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Look at this video…
CJP chief spokesperson Saurav Das has brought a servant along just to fan him because it’s too hot outside.
These are the same people who claim to be fighting for equality and social justice…. pic.twitter.com/CgUQwBHeqC— Mr Sinha (@Mrsinha) June 6, 2026
“>
இதனால் போராட்டக் களத்தில் அமர்ந்துகொண்டு காபி குடித்துக்கொண்டு, மற்றவர்களைத் தங்களுக்குச் சேவை செய்யப் பணிக்கும் இவர்களா சமூக மாற்றத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
