மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில், ஒருதலைக் காதலை நிராகரித்த 17 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கோடரியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தாவ்னி கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கோடரியால் சுமார் 20 முறை சரமாரியாக வெட்டியுள்ளான்.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டின் மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று, கயிற்றால் தூக்கிலிட முயன்ற அவனது கொடூரமான செயல் சிசிடிவி கேமராவில் பதிவாகி அனைவரையும் உலுக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக கயிறு நழுவியதால் சிறுமி கீழே விழுந்து உயிர் தப்பினார், இருப்பினும் அவர் மிகக் கடுமையான காயங்களுடன் குவாலியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“>

இந்த கொடூரச் செயலைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சுமார் ஏழு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர்.