தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்; முன்னதாக நாளை விசாரணை நடைபெறும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது நாளை விசாரணை ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான தொண்டர்களைப் பார்த்த விஜய், தனது காரின் மேல்தளம் வழியாக நின்று கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ள சூழலில், சிபிஐ விசாரணை முடிந்து விஜய் காட்டிய இந்த மகிழ்ச்சியான ரியாக்‌ஷன் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மார்ச் 30-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், இந்த 3-ம் கட்ட விசாரணை முடிந்து விஜய் சென்னை திரும்புகிறார். இந்த விசாரணையின்போது சிபிஐ அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் “டிவிகே” என்று முழக்கமிட்டு அவருக்குப் பலத்த வரவேற்பு அளித்தனர்.