உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மனநலக் குறைபாடு காரணமாக வாலிபர் ஒருவர் தனது ஆசனவாய்க்குள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை நுழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 36 மணிநேரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.
ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு வந்தார். கடும் வயிற்று வலியால் துடித்த அவருக்கு எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது, மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது மலக்குடல் பகுதியில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட நபருக்கு ‘ஆசனவாய் காமம்’ (Anal Eroticism) எனப்படும் ஒருவித மனநலக் கோளாறு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இத்தகைய குறைபாடு உள்ளவர்கள், ஆசனவாய் பகுதியில் பொருட்களை நுழைப்பதன் மூலம் இன்பம் காண முயல்வார்கள். அந்த வகையில், அந்த நபர் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை உள்ளே நுழைத்துள்ளார். ஆனால், அது வெளியே எடுக்க முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது.
36 மணிநேரமாக பாட்டில் உள்ளேயே இருந்ததால், அவரால் மலம் கழிக்க முடியாமலும், கடுமையான வலியாலும் அவதிப்பட்டுள்ளார். நிலைமை மோசமான பிறகே அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுனில் சர்மா தலைமையிலான குழுவினர், சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் போராடி அந்த பாட்டிலை அகற்றினர். இது குறித்து டாக்டர் சர்மா கூறுகையில்:
“இது ‘சைக்கோ செக்சுவல் டிஸார்டர்’ (Psycho-sexual disorder) எனப்படும் ஒரு மனநலப் பாதிப்பாகும். நோயாளிக்கு மலக்குடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. பாட்டிலை அகற்றிய பிறகு, நான்கு நாட்கள் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
திருமணமான அந்த நபருக்கு இது போன்ற பழக்கத்தினால் எச்.ஐ.வி (HIV), ஹெபடைடிஸ் போன்ற பால்வினை நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தகைய நோயாளிகளுக்கு உடல் ரீதியான சிகிச்சையை விட, மனநல ஆலோசனைகள் (Counseling) மிகவும் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
