டெல்லியில் திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்ற 24 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் திவாரி (24) என்ற இளைஞருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருக்கமான காதலாக மாறியது.
அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அபிஷேக்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்தில் விருப்பமில்லாத அபிஷேக், அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று, அந்தப் பெண்ணை ஒரு ஹோட்டல் அறைக்கு வரவழைத்த அபிஷேக், அங்கு அவருடன் உறவு கொண்ட பிறகு, திடீரென அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அபிஷேக்கைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
