சமூக வலைதளங்களில் ஒரு ரீல்ஸ் எடுப்பதற்காகத் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் டிக்கிக்குள் வைத்து மூடிய அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வீட்டிற்கு வெளியே நிற்கும் அந்தப் பெண், தனது குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கையை உயர்த்தி உள்ளே வைக்கிறார்.
பிறகு சிரித்துக்கொண்டே டிக்கியை மூடிவிட்டு ஸ்கூட்டரை ஓட்டிச் செல்கிறார். மத்திய பிரதேச மாநில பதிவு எண் கொண்ட அந்த ஸ்கூட்டரில் நடந்த இந்தச் செயல், பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. வெறும் புகழுக்காகக் குழந்தையின் உயிரோடு விளையாடும் அந்தத் தாயின் பொறுப்பற்ற தனத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் இதேபோல் குழந்தையை ஒரு பையில் போட்டுத் தூக்கிக்கொண்டு ஸ்கூட்டர் ஓட்டும் மற்றொரு வீடியோவையும் பதிவிட்டுள்ளது தெரியவந்தது.
ஸ்கூட்டரின் டிக்கி என்பது பொருட்கள் வைப்பதற்கான இடமே தவிர, குழந்தைகளை வைப்பதற்கானது அல்ல. காற்று புகாத அந்தச் சிறிய இடத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவோ அல்லது என்ஜின் சூட்டினால் பாதிப்பு ஏற்படவோ அதிக வாய்ப்புள்ளது.
A mother put her baby in the scooter’s storage box like luggage, on just a pillow, then drove off.
Heartbreaking and dangerous, what if there’s an accident? That tiny life is everything.
Please, protect our kids. This can’t be “content.” 😢 pic.twitter.com/HKXhQ8UgKL
— Sachya (@sachya2002) March 11, 2026
“>
“வெறும் ரீல்ஸுக்காக இப்படியா செய்வது? அந்தத் தாய்க்குச் சிறிதளவாவது அறிவு வேண்டாமா?” எனப் பலரும் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரீல்ஸ் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் தான் தீர்வு என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
