அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகவும் கோப்பையை வென்று இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. வெற்றிக்குப் பிறகு வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளம் வீரர் திலக் வர்மா தேசியக்கொடியை ஏந்தி ஓடி வந்தபோது, எதிர்பாராதவிதமாக கொடி கையில் இருந்து கீழே விழுந்தது.
During the victory lap, Tilak Varma was waving the Indian tricolor. At one moment, the flag slipped out of the pole and fell to the ground. He didn’t notice it immediately, but when a member of the support staff quickly picked it up and gave it back, Tilak placed the tricolor on… pic.twitter.com/wzM1PdZEt3
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 9, 2026
உடனடியாகக் கொடியை எடுத்த திலக் வர்மா, அதனைத் தனது கண்களில் ஒற்றிக்கொண்டு மன்னிப்புக் கோரினார். தேசத்தின் மீதான அவரது இந்த மரியாதையைப் பார்த்த ரசிகர்கள், “வெற்றிக் களிப்பிலும் திலக் வர்மா தனது கடமையை மறக்கவில்லை” என அவரைச் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
