பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னரும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் தொடர்ந்து இயங்கி வருவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமேனியின் மரணத்திற்குப் பிறகு அவரது பக்கம் “தியாகி” என மாற்றப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது, அதன் விளைவுகள் அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும்” என்று குறிப்பிடப்பட்டு, ஈரானின் ஏவுகணை வலிமையைக் காட்டும் படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில், சமூக வலைதளங்களில் இது குறித்துக் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் மிகவும் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரான் “நிபந்தனையற்ற சரணடைதலை” அறிவிக்க வேண்டும் என்றும், அதுவே இந்தப் போரை முடிக்க ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The Zionist regime has made a big mistake, and its consequences will make the regime desperate, by God’s grace. pic.twitter.com/vBVMXIYjaf
— Khamenei.ir (@khamenei_ir) March 6, 2026
“>
ஈரான் சரணடைந்து புதிய தலைமையைத் தேர்ந்தெடுத்தால், அந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா உதவும் என்று கூறிய டிரம்ப், “ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம்” என்ற புதிய முழக்கத்தையும் முன்வைத்துள்ளார்.
தற்போது இந்த மோதல் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
