இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்பி எடுக்கும் மோகம் அதிகரித்துவிட்டது. இதற்காக மக்கள் எவ்வித ஆபத்தையும் துணிந்து எதிர்கொள்கின்றனர்; மலை உச்சி, ஓடும் பைக், உயரமான கட்டிடங்கள் அல்லது ஆபத்தான விலங்குகளுடன் வீடியோ எடுப்பது எனச் சமூக வலைதளங்கள் இதுபோன்ற காட்சிகளால் நிறைந்துள்ளன.
அந்த வகையில், தற்போது ஒரு நபர் சிறுத்தையுடன் அமர்ந்து மிகவும் நிதானமாக செல்பி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த நபர் சிறுத்தையைக் கண்டு பயப்படாமல் இருப்பதோடு, அந்த சிறுத்தையும் ஒரு செல்லப் பிராணியைப் போல அமைதியாக வீடியோவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளப் பக்கமான ‘X’-ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், பீகாரைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது விளைநிலத்திற்குள் புகுந்த சிறுத்தையுடன் செல்பி எடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபர் சிறுத்தையின் மிக அருகாமையில் நின்றுகொண்டு வீடியோ எடுத்தாலும், அவர் முகத்தில் சிறு பயம் கூட இல்லை.
Farmer in India took a selfie with a leopard that entered his field.. pic.twitter.com/GGV7BWUk5L
— Damn Nature You Scary (@AmazingSights) February 25, 2026
“>
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இது உண்மையான காட்சிதான் என்று ஏஐ தொழில்நுட்பமான ‘க்ரோக்’ உறுதிப்படுத்தியுள்ளது. “இது அந்த விவசாயியின் நிலம் என்பதால், சிறுத்தை அவருக்கு உரிய மரியாதை கொடுத்து அமைதியாக இருக்கிறது” எனப் பலரும் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
