கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, கனரா வங்கியில் தான் வாங்கியிருந்த 50,000 ரூபாய் கடனை முழுமையாகச் செலுத்தி முடித்துவிட்டார். ஆனால், சில மாதங்கள் கழித்து வங்கி தரப்பிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், “உங்கள் கணக்கில் இன்னும் 9 ரூபாய் 34 பைசா பாக்கி இருக்கிறது, அதை உடனே கட்டவும்” என்று சொல்லப்பட்டுள்ளது. வெறும் 9 ரூபாய்க்காக வங்கி தன்னை அலைக்கழித்ததை நினைத்து அந்த விவசாயி ஒரு அதிரடி முடிவெடுத்தார்.

​நேராக வங்கிக்குச் சென்ற அவர், 10 ரூபாயைச் செலுத்திவிட்டு, “பாக்கி தொகையை எடுத்துக்கொண்டு எனக்கு மீதி 66 பைசாவைக் கொடுங்கள்” என்று கறாராகக் கேட்டுள்ளார். “வங்கிகள் எங்களிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் கணக்கு பார்க்கும் போது, நாங்கள் ஏன் எங்கள் பணத்தை விட வேண்டும்?” என்று அவர் கேட்ட கேள்விக்கு வங்கி அதிகாரிகளிடம் பதில் இல்லை. 66 பைசாவிற்காக அந்த விவசாயி காட்டிய பிடிவாதம் இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.