கல்யாணம் முடிந்து மூன்றே நாட்கள்.. புகுந்த வீட்டிற்குச் சமையல் செய்து கொடுப்பதாகக் கூறி, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு மணப்பெண் கைவரிசை காட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த அனைவரும் மயங்கிய நிலையில், சுமார் 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், 5 லட்சம் வெள்ளி மற்றும் 18 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் அந்தப் பெண் எஸ்கேப் ஆகியுள்ளார்.

​பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், அந்தப் பெண் தனது காதலனுடன் (உறவுமுறை மாமா) ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் செய்த இந்தத் துணிகரத் திருட்டு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.