பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் 60 வயதான நாட்டு மருந்து வைத்தியர் (Hakeem) பாபர், தன்னை விட 34 வயது இளையவரான 26 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளார். இவர்களது திருமண வீடியோக்கள் மற்றும் போட்டோஷூட் காட்சிகள் சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகின்றன. மணமேடையில் மணமகன் பாபர் தனது மனைவிக்காக ரொமான்டிக்காகப் பாட்டுப் பாடும் காட்சிகள் நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.
A 60-year-old man, identified as Hakeem Babar, has married a 26-year-old woman in Rawalpindi, Pakistan. According to him, their relationship began after he expressed his feelings by saying, “I love you.” A video from their bridal photoshoot has surfaced on social media and… pic.twitter.com/Qpf090jldu
— NewsX World (@NewsX) February 27, 2026
இந்தத் திருமணத்தைப் பார்த்த பலரும், “வைத்தியர் தாத்தாவிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பி மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாத அந்தத் தம்பதியினர், “நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, குடும்பத்தினர் சம்மதத்துடன்தான் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். 34 வயது வித்தியாசம் என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம் என்றும், சட்டப்படி இதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர்களுக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
