சீனாவின் ‘ஹெனான் குவாங்ஷான் கிரேன்’ நிறுவனத்தின் உரிமையாளர் குய் பெய்ஜுன், தனது 7,000 ஊழியர்களுக்கு சுமார் 238 கோடி ரூபாயை (180 மில்லியன் யுவான்) போனஸாக வாரி வழங்கி உலகையே அதிர வைத்துள்ளார். வெறும் போனஸ் அறிவிப்போடு நிறுத்தாமல், அலுவலகத்தில் 800 மேசைகள் நிறைய பணக்கட்டுகளைக் குவித்து வைத்து, ஊழியர்களைக் கூப்பிட்டு “உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை எண்ணி எடுத்துக்கொள்ளுங்கள்” என அதிரடி காட்டியுள்ளார். இந்த மெகா போனஸ் திருவிழாவில் ஊழியர்கள் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.

​வெறும் ‘மோட்டிவேஷன்’ பேச்சுகள் ஊழியர்களின் பசியைத் தீர்க்காது என்பதை உணர்ந்த இந்த முதலாளி, “இளைஞர்கள் கார் லோன், ஹோம் லோன் எனப் பல சுமைகளில் இருக்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான உதவி பணம்தான்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 2024-லும் இதேபோல் கோடிக்கணக்கில் போனஸ் வழங்கிய இவர், 2025 மகளிர் தினத்திலும் பெண் ஊழியர்களுக்குப் பணத்தை வாரி இறைத்துள்ளார். இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு பாஸ் நமக்குக் கிடைக்கமாட்டாரா?” என ஏங்கித் தவித்து வருகின்றனர்.