தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவிற்குப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நேற்று (பிப்.23) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் C.P. பிரபு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் டாக்டர் இராஜன் மற்றும் அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவையின் தலைவர் சோ.ஜெயமணி ஆகியோர், வரும் தேர்தலில் அதிமுகவிற்குத் தங்களது முழு ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.
அடுத்தடுத்த கட்சிகளின் ஆதரவால் அதிமுக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
